திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் வஉசி ரோட்டில் சிலர் கஞ்சா விற்று கொண்டிருப்பதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், திருச்சி மாநகர மதுவிலக்கு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் உமாசங்கரன் தலைமையான போலீசார் வஉசி ரோட்டில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒருவர் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தார். அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவர் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த செல்வம் (54) என்பது தெரிய வந்தது. மேலும், இவர் திருச்சியில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்றது தெரிய வந்தது. இதை அடுத்து மதுவிலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வத்தை கைது செய்து அவரிடமிருந்து 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் ஆகும். மேலும் அவரிடமிருந்து 2 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
1
of 956
Comments are closed.