போலியாக பத்திரப்பதிவு செய்யப்பட்டால் உடனடியாக ரத்து செய்யப்படும்..
திருச்சியில் அமைச்சர் மூர்த்தி பேட்டி..
திருச்சி தில்லை நகர் 7-வது குறுக்குத்தெருவில் மாநகராட்சி வணிக வளாக தரைத்தளத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகத்தை இன்று ( 29.06.2023 ) நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு , வணிகவரித்துறை மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் திறந்து வைத்தனர். 18 கிராமங்களை உள்ளடக்கியதாக இந்த அலுவலகம் செயல்படும். பின்னர் அமைச்சர் மூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:-
திருச்சி தில்லைநகர் பகுதியில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகம் நகரின் மையப்பகுதியில் பொதுமக்கள் வந்து செல்வதற்கு எளிதாகவும், போக்குவரத்து வசதி மிகுந்த நகரின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. பதிவுத் துறையை பொறுத்தவரை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூ.8 ஆயிரம் கோடி கூடுதலாக கிடைத்துள்ளது. ரூ.26 ஆயிரம் கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போலியான பதிவுகள் கண்டறியப்பட்டால் உடனடியாக ரத்து செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். திறப்பு விழாவில் திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார் ஐஏஎஸ் , மாநகராட்சி மேயர் அன்பழகன், ஆணையர் வைத்திநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, காடுவெட்டி தியாகராஜன், ஸ்டாலின்குமார் மற்றும் பத்திரப்பதிவுத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.