கோவை விமான நிலையத்திற்கு மின்னஞ்சல் மூலமாக மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினர் மோப்ப நாய் உதவியுடன் விமான நிலையம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனர். பயணிகளின் உடைமைகளும் தீவிரமாக சோதனை இடப்பட்டன. ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அது, வெறும் புரளி என்பது தெரிய வந்தது. விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சமீபகாலமாக விமான நிலையம் மட்டுமின்றி, முக்கிய பள்ளிகள், மருத்துவமனைகளுக்கு மிரட்டல் விடுக்கும் போக்கு அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.