Rock Fort Times
Online News

சாலை விரிவாக்க பணியின் போது பழமையான யானை சிலை கண்டெடுப்பு..

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் கும்பகோணம் – மயிலாடுதுறை சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியின்போது திருபுவனம் கடைவீதியில் ஜேசிபி இயந்திரம் மூலம் சாலை அகலப்படுத்தும் பணிக்காக பள்ளம் தோண்டியபோது கருங்கல்லால் ஆன யானை சிலை கண்டெடுக்கப்பட்டது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர். இது குறித்த தகவலின் பேரில், திருவிடைமருதூர் போலீசார் தாசில்தார் சுசீலாவிடம் தெரிவித்தனர். அவரது ஆலோசனையின் பேரில், யானை சிலை தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்