திருச்சி மாவட்டம் தா.பேட்டை அருகே உள்ள வாளசிராமணி ரெட்டியார் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 43). விவசாயியான இவர் தனக்கு சொந்தமான தங்க நகைகளை பவித்திரத்தில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் அடமானம் வைத்து ரூ.80 ஆயிரம் வாங்கிக் கொண்டு மொபட் பெட்ரோல் டேங்க் கவரில் வைத்துக் கொண்டு வீடு திரும்பினார். முன்னதாக, வாளசிராமணி பகுதியில் உள்ள பேக்கரி முன்பு மொபட்டை நிறுத்திவிட்டு டீ குடிக்க சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது டேங்க் கவரில் வைத்திருந்த ரூ.80 ஆயிரத்தை காணவில்லை. வங்கியில் பணம் எடுத்து வருவதை நோட்டமிட்டு பின் தொடர்ந்து வந்த மர்ம ஆசாமிகள் இந்த காரியத்தை செய்திருக்கலாம் என்று தெரிகிறது. இதுகுறித்து தா.பேட்டை போலீசில் சிவக்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.