Rock Fort Times
Online News

முசிறி நகராட்சி தூய்மை பணியாளர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்…

துப்புரவு பணிகளை தனியாருக்கு வழங்குவதை கண்டித்தும், தற்காலிக பணியாளர்களை நிரந்தரமாக்க வேண்டும், மாவட்ட கலெக்டர் தெரிவித்தபடி தினக்கூலி ரூ. 630 வழங்க வேண்டும் , ஈ. பி எஃப், இ.எஸ்.ஐ. மற்றும் 8 மணி நேர வேலை, வார விடுப்பு, பண்டிகை கால விடுப்பு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி அலுவலக தற்காலிக துப்புரவு தூய்மை பணியாளர்கள், சங்க தலைவர் கார்த்திக் தலைமையில் வேலை நிறுத்தம் செய்தனர். மேலும், சி.ஐ.டி.யு. உள்ளாட்சி துறை மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம், ஒன்றிய செயலாளர் நல்லுசாமி, ஒன்றிய குழு உறுப்பினர் கிருஷ்ணன் ஆகியோர் நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் தற்காலிக தூய்மை பணியாளர்கள் 70-க்கும் மேற்பட்டோர் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் இன்று இரண்டாவது நாளாக நீடித்தது. அவர்களிடம் முசிறி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் பாத்திமா சகாயராஜ், நகராட்சி ஆணையர் கிருஷ்ணவேணி, நகர மன்ற தலைவர் கலைச்செல்வி சிவக்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என, துப்புரவு பணியாளர்கள் கூறினர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்