அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினார்கள். செந்தில் பாலாஜி கைது சட்டவிரோதம், அவரை விடுவிக்க வேண்டும் என நீதிபதி நிஷா பானுவும், மனு விசாரணைக்கு ஏற்றதல்ல என நீதிபதி பரத சக்கரவர்த்தியும் தீர்ப்பு வழங்கினர். இதன் காரணமாக செந்தில் பாலாஜி மனைவியின் ஆட்கொணர்வு மனுவை 3வது நீதிபதி அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.