Rock Fort Times
Online News

திருச்சியில் டீக்கடையை உடைத்து பொருட்கள் திருட்டு…!

திருச்சி தென்னூர் இனாம்தார் தோப்பு பகுதியைசேர்ந்தவர் ராஜு. இவரது மகன் சுரேஷ். இவர் திருச்சி ஜென்னி பிளாசா அருகே பறவைகள் சாலையில் டீக்கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல, நேற்று கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். இன்று காலை கடையை திறக்க வந்தபோது பூட்டு உடைந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது டீ பாயிலர்கள், 2 சிலிண்டர்கள் மற்றும் டீக்கடையில் இருந்த ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு போய் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சுரேஷ் கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கு முன்பு இதே கடையில் ஒரு முறை திருட்டு நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், திருச்சி ஜங்ஷன் ஸ்டேட் வங்கி எதிரில் உள்ள சொக்கலிங்கம் என்பவரது டீக்கடை பூட்டையும் மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். ஆனால் பொருட்கள் எதுவும் திருடு போகவில்லை. அதே பகுதியில் உள்ள மற்றொரு டீக்கடையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பொருட்களை அள்ளி சென்றனர். இந்த தொடர் திருட்டு சம்பவம் ஜங்ஷன் பகுதி வியாபாரிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்