திருச்சியில் 6-ம் தேதி எம்.ஜி.ஆர்.சிலை திறப்பு விழா…
எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க நிர்வாகிகள் முடிவு...
திருச்சி பெல் வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் மறைந்த எம்.ஜி.ஆர். சிலை நிறுவப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா வருகிற 6-ம் தேதி நடக்கிறது. இதில், முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். சிலையை திறந்து வைக்கிறார். இதுகுறித்த அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி தலைமையில் மாவட்ட அலுவலகத்தில் இன்று ( 01.07.23 ) நடைபெற்றது. கூட்டத்தில், வருகிற 6-ம் தேதி மாலை 5மணி அளவில் திருச்சியில் நடைபெற உள்ள எம்.ஜி.ஆர். திருவுருவச் சிலை திறப்பு விழாவிற்கு வருகை தரும் அ.தி.மு.க.பொதுச் செயலாளர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில், கட்சியின் அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர் வளர்மதி, மாவட்ட அவைத் தலைவர் பிரின்ஸ் தங்கவேல், முன்னாள் அமைச்சர் பூனாட்சி, மாவட்ட இணை செயலாளர் இந்திராகாந்தி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மு.பரமேஸ்வரி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல இணைச் செயலாளர் திருநாவுக்கரசு, மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் ஜி.ரமேஷ், புல்லட் ஜான், பாஸ்கரன், ஏவூர் நாகராஜன், பேரூர் கண்ணதாசன், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார், நகர செயலாளர் சுப்ரமணியன், அமைதி பாலு, ஒன்றிய செயலாளர்கள் ஆதாளி, ராஜமாணிக்கம், சேனை செல்வம், முத்துக்கருப்பன், L.ஜெயக்குமார், நடராஜன், பிரகாஷவேல், ஆமூர் ஜெயராமன், பால்மணி, ஜெயம், ராம்மோகன், வெங்கடேசன், ஜெயக்குமார், அழகாபுரி செல்வராஜ், கடிகை ராஜகோபால், பேரூராட்சி செயலாளர்கள் ராமச்சந்திரன், சம்பத்குமார், திருஞானம் பிள்ளை, ராஜாங்கம், ராஜேந்திரன், பகுதி செயலாளர் டைமண்ட் திருப்பதி, சுந்தர்ராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.