Rock Fort Times
Online News

திருச்சி பொன்நகர் பகுதியில் நாளை மின் தடை..

திருச்சி நகரியம் கோட்டம், பொன்நகர் பிரிவுக்கு உட்பட்ட சில இடங்களில் நெடுஞ்சாலை துறையினரால் சாலை விரிவாக்க பணிகளுக்கு இடையூறாக உள்ள மின்கம்பங்கள் மற்றும் மின் பாதைகளை மாற்றி அமைக்கும் பணி நடைபெற உள்ளது. ஆகவே, நாளை  ( 30.6.2023 ) காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பார்சன் அபார்ட்மென்ட், சக்தி நகர் 10 வது கிராஸ், ராமகிருஷ்ணா நகர் 1, 2 மற்றும் 3-வது கிராஸ், ஆல்பா நகர் 1, 2 மற்றும் 3-வது கிராஸ், ஆல்பா நகர் மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்