Rock Fort Times
Online News

திருச்சியில் கஞ்சா விற்றதாக 2 போ்  கைது..

திருச்சி பாலக்கரை போலீஸ் சரக்கத்திற்கு உட்பட்ட காஜாப்பேட்டை பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து பாலக்கரை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜகோபால் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள பொது கழிவறை அருகே கஞ்சா விற்றதாக பாலக்கரை கீழப்புதூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன், பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் பகுதியை சேர்ந்த விக்னேஷ் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களில், மணிகண்டன் மீது 11 வழக்குகளும், விக்னேஷ் மீது ஒரு வழக்கும் ஏற்கனவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்