Rock Fort Times
Online News

அமைச்சா் செந்தில் பாலாஜியிடம், உடல் நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..

தமிழக மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் வீடு மற்றும் அவர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். சோதனையைத் தொடர்ந்து  அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் சென்னை ஓமாந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாாித்தாா். முதல்வருடன் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, மா.சுபிரமணியன், பொன்முடி, ஏவா.வேலு உள்ளிட்டோா் உடன் சென்றனர்.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்