Rock Fort Times
Online News

திருப்பரங்குன்றம் மலை உச்சிக்குச் செல்ல 50 நபர்களுக்கு மட்டுமே அனுமதி!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், வி.பார்த்திபன் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, காவல் ஆணையர் ராஜேந்திரன் ஆகியோர் அடங்கிய வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நிர்வாகக் காரணங்களுக்காக திருப்பரங்குன்றம் மலை உச்சிக்குச் செல்ல குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மலை உச்சிக்குச் செல்ல 50 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என ஓய்வுபெற்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். உரிய அனுமதி பெற்ற 50 பேர் மட்டுமே பிற்பகல் 3 மணிக்குள் மலை ஏறிச் செல்லலாம். மற்ற பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு மலை மீது ஏற அனுமதி கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சட்டம் மற்றும் ஒழுங்கைப் பாதுகாக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்