Rock Fort Times
Online News

“ஆட்டுக்குத் தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் எதற்கு?” என்று முழங்கியவர்கள் இன்று அதே ஆளுநர் வாசலில் சரணாகதி அடைந்துள்ளனர்…* மாணிக்கம் தாகூர் எம்.பி.!

சென்னை, கிண்டியில் உள்ள மக்கள் பவனில் ஆளுநர் அர்லேகரை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி சந்தித்தார். அப்போது, கலெக்டர் விவகாரத்தில் த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை கைது செய்ய வலியுறுத்தல் மற்றும் புகாரளிக்க வந்தவரை தாக்கியதாக கூறப்படும் துணை சபாநாயகர் ரவிசங்கர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி ஆளுநரிடம் மனு அளித்தார். இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி.வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

“யூ ஆர் ஜஸ்ட் எ போஸ்ட்மேன்!” என்று மேடையில் முழங்கியவர்கள், இன்று அதே ‘தபால்காரரிடம்’ தபால் கொடுக்க வரிசையில் நிற்கிறார்கள். அன்று அதிகாரம் கையில் இருந்தபோது “ஆட்டுக்குத் தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் எதற்கு?” என்று கொள்கை முழக்கம்; இன்று பதவி போனதும் ஆளுநர் மாளிகை வாசலில் சரணாகதி அடைந்துள்ளது திமுக! மொத்தத்தில், உதயநிதியின் வழி அது ஆளுநர் வழி மற்றும் பாஜக வழி! இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழக வெற்றி கழகம், 

இதுகுறித்து தவெக வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஆட்சியில் இருந்தவரை ஆளுநரைப் பேசவிடாமல் செய்துவிட்டோம் என்று கொக்கரித்துவிட்டு, இப்போது “ஆபத்பாந்தவனே” என்று ஆளுநரிடம் போய் நிற்கின்றனர். “கலைஞரின் ஆசி பெற்ற சின்னம் தாமரை” என்ற வரலாறு மீண்டும் அரங்கேறப் போகிறது. அன்று போலவே பாஜகவைத் தமிழ்நாட்டில் வளர்க்கும் பணியை திமுக தலைமையேற்று நடத்தவிருக்கிறது. திமுக ஒரு தீயசக்தி என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிப்பதற்கு வாழ்த்துகள்! இவ்வாறு தெரிவித்துள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்