திருச்சியில், முன்னாள் மத்திய அமைச்சர் மறைந்த முரசொலி மாறன் உருவப்படத்திற்கு முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை…!
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் 23-வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி, தில்லை நகர் சாஸ்திரி சாலையில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள முரசொலி மாறன் திருவுருவப்படத்திற்கு திமுக முதன்மைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்வில் மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.என்.சேகரன், மாவட்ட துணைச் செயலாளர் விஜயா ஜெயராஜ் மற்றும் நிர்வாகிகள் டோல்கேட் சுப்பிரமணி, கருணை ராஜா, குடமுருட்டி சேகர், பகுதி செயலாளர்கள் மண்டி சேகர், கமால் முஸ்தபா, எம்.ஏ.எஸ்.மணி, சிவக்குமார், ராஜ் முகமது மற்றும் கழக நிர்வாகிகள் செல்வம், மாணிக்கம், துர்கா தேவி, கலைச்செல்வி, ராஜேந்திரன், தஸ்தா பாய், சுரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


Comments are closed.