Rock Fort Times
Online News

திருச்சி மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்… * கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க மேயர் மு.அன்பழகன் உத்தரவு..!

திருச்சி மாநகராட்சி சார்பில் ஒவ்வொரு திங்கட்கிழமை தோறும் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
அந்தவகையில் இன்று(நவம்பர் 23) திங்கட்கிழமை பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில் மேயர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் மாநகராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தனர். அதனைப் பெற்றுக் கொண்ட அவர், அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், துணை மேயர் ஜி.திவ்யா தனக்கோடி, நகர பொறியாளர் அண்ணாதுரை , மண்டலத் தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், பி.ஜெயநிர்மலா, துர்காதேவி
மற்றும் உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளர்கள், மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்