Rock Fort Times
Online News

ராஜஸ்தான் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி… * ஆளும் பாஜகவுக்கு பின்னடைவு..!

ராஜஸ்தானில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. மாநிலத்தின் ஆளும் கட்சியான பாஜகவுக்கு இது மிகப் பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. ராஜஸ்தான் ஊரக உள்ளாட்சித் தேர்தலில், மொத்தம் உள்ள 1,271 ஜில்லா பரிஷத் இடங்களில் 794 இடங்களையும், 7,520 பஞ்சாயத்து சமிதி இடங்களில் 3,758 இடங்களையும் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. பாஜக 357 ஜில்லா பரிஷத் இடங்களையும், 2,213 பஞ்சாயத்து சமிதி இடங்களையும் வென்றுள்ளது. ராஷ்ட்ரிய லோக் தாந்திரிக் கட்சி 51 ஜில்லா பரிஷத் இடங்களையும், 497 பஞ்சாயத்து சமிதி இடங்களையும் கைப்பற்றியுள்ளது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பஞ்சாயத்து சமிதிகளில் அதிக எண்ணிக்கையிலான தலைவர்களை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு, பாஜக மற்றும் ஆர்எல்பி கட்சிகளை விட காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக உள்ளது. ஜில்லா தலைவர்களுக்கான தேர்தல் நவம்பர் 25-ம் தேதியும், பஞ்சாயத்து சமிதி தலைவர்களுக்கான தேர்தல் நவம்பர் 27-ம் தேதியும் நடைபெறவுள்ளன.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்