தமிழக அரசின் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.22.30 கோடி இணையவழியில் மோசடி செய்த வழக்கில், 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக சென்னை சைபா் குற்றப்பிரிவு போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில், பல மாநிலங்களிலிருந்து பணம் திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ள நிலையில், குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படை போலீஸார் 3 மாநிலங்களுக்கு விரைந்துள்ளனர். ஆயிரக்கணக்கான வங்கிக் கணக்குகள் மூலம் இந்தப் பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளது
கண்டறியப்பட்டுள்ளது. இந்த மோசடி வழக்கு தொடர்பாக இதுவரை 9 பேரைக் கைது செய்துள்ள சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார், பின்னணியில் உள்ள முக்கியக் குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


Comments are closed.