Rock Fort Times
Online News

மலேசியாவில் உயிரிழந்த மணப்பாறை இளைஞரின் உடலை சொந்த ஊருக்குக் கொண்டுவர ரூ.1.60 லட்சம் நிதி உதவி… மனிதநேயத்துடன் உதவிக்கரம் நீட்டிய எம்.எல்.ஏ. கதிரவன்!

திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கருப்பூர் ஊராட்சியைச் சேர்ந்தவர் துரைமுருகன். மலேசியாவில் பணியாற்றி வந்த இவர், கடந்த 10 நாட்களுக்கு முன்பு எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார். அவரது உடலை சொந்த ஊருக்குக் கொண்டுவர முடியாமல் குடும்பத்தினர் தவித்து வந்தனர். இதையறிந்த மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா. கதிரவன், உயிரிழந்தவரின் உடலை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் இறங்கினார். இதற்காக தனது சொந்த பணம் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் செலவிட்டு, உடலை சொந்த ஊருக்குக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். மேலும், உயிரிழந்தவரின் குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மலேசியா சென்று வருவதற்கான விமானப் பயணச் சீட்டுகள் மற்றும் அங்கு தங்குவதற்கான ஹோட்டல் வசதிகளையும் தனது சொந்த செலவில் ஏற்பாடு செய்து கொடுத்தார். வெளிநாட்டில் உயிரிழந்தவரின் உடலை மீட்டுக் கொண்டுவர முடியாமல் தவித்த குடும்பத்தின் துயரத்தை உணர்ந்து, இக்கட்டான நேரத்தில் பொருளாதார உதவியுடன் நேரடியாகத் துணைநின்ற எம்.எல்.ஏ. ரா. கதிரவனின் இந்த மனிதநேயச் செயல் மணப்பாறை தொகுதி மக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்