Rock Fort Times
Online News

கர்நாடக அரசை கண்டித்து திருச்சி காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் நூதன போராட்டம்…!

தமிழகத்திற்கான காவிரி நீரைத் திறந்துவிடாமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வரும் கர்நாடக அரசைக் கண்டித்தும், காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் எனக் கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் தெரிவித்து வரும் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சி காவிரி ஆற்றில் இறங்கி மணலில் தங்கள் உடலை புதைத்துக் கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தமிழகத்திற்கான காவிரி நீரை உடனடியாகத் திறந்துவிட வேண்டும், மேகதாது அணை கட்டும் திட்டத்தைக் கைவிட வேண்டும், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்