Rock Fort Times
Online News

தமிழக காவல்துறையில் அடுத்தடுத்து பரபரப்பு; இரண்டு நாட்களில் 2 இன்ஸ்பெக்டர்கள், ஒரு சப்- இன்ஸ்பெக்டர் ‘டிஸ்மிஸ்’…!

தமிழ்நாடு காவல்துறையில் 2 இன்ஸ்பெக்டர்கள், ஒரு சப்- இன்ஸ்பெக்டர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்த விவரம் வருமாறு;

திண்டுக்கல் மாவட்டம், பழனி தாலுகா காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சப்- இன்ஸ்பெக்டர் ராஜகோபால் தன்னிடம் புகார் அளிக்க வந்த ஒரு பெண்ணின் அலைபேசி எண்ணைப் பெற்று, அவருக்கு நள்ளிரவில் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக பாதிக்கப்பட்ட அந்த பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் கடந்த மே மாதம் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டார். இந்தநிலையில், அவர்மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டதில் குற்றச்சாட்டுகள் உறுதிசெய்யப்பட்டதால், அவர் தமிழ்நாடு காவல்துறை பணியிலிருந்து நிரந்தரமாக (டிஸ்மிஸ்) நீக்கம் செய்து மதுரை தென் மண்டல ஐ.ஜி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதேபோல், திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு காவல் நிலைய ஆய்வாளர் கௌதமன், 2024-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றிய போது, புகாரை முறையாகக் கையாளாமல் அலட்சியமாகச செயல்பட்டது தெரிய வந்துள்ளது.
இதன் அடிப்படையில் அவரும் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். இதேபோல தூத்துக்குடியில் பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் எழுந்த நிலையில் காவல் ஆய்வாளர் திலீபன் நேற்று டிஸ்மிஸ் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 2 நாட்களுக்குள் 3 போலீஸ் அதிகாரிகள் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்