குடமுருட்டி பாலத்திற்கு மாற்றாக 25 கோடி ரூபாயில் புதிய பாலம் கட்டப்படும் என்று திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ தெரிவித்துள்ளார். திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குடமுருட்டி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் அமைப்பது தொடர்பாக, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் இன்று( நவம்பர் 14) நேரில் கள ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஆங்கிலேயர் காலத்தில் செங்கற்களால் கட்டப்பட்ட இப்பாலம், நூற்றாண்டைக் கடந்து மிகவும் பழுதடைந்துள்ளது. ஆங்காங்கே விரிசல்கள், கீறல்கள் ஏற்பட்டுள்ளதால், மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் உயிர்ச்சேதம் நிகழும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடம் முறையிட்டதைத் தொடர்ந்து, உடனடியாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. சுமார் ரூ.25 கோடி மதிப்பீட்டில், தற்போதைய 7 மீட்டர் பாலத்திற்கு அருகில் 10.5 மீட்டர் அகலத்தில் புதிய பாலம் கட்டப்படவுள்ளது. ஒரு வாரத்திற்குள் வரைபடங்கள் தயார் செய்யப்பட்டு நிர்வாக அனுமதிக்கு அனுப்பப்படவுள்ளன. அனுமதி கிடைத்தவுடன் பணிகள் தொடங்கப்பட்டு, 15 மாதங்களுக்குள் கட்டுமானப் பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விஞ்ஞான ரீதியான ஊழல் நடைபெற்றுள்ளது. இது இளைய சமுதாயத்திடம் தவறான புரிதலை ஏற்படுத்தும். தமிழகம் முழுவதும் நூலகங்களில் ஊழல் நடந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.