முன்னாள் பாரதப் பிரதமர் மறைந்த ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் விழா ஆண்டுதோறும் குழந்தைகள் தின விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் நாளை(14-11-2026) ஜவகர்லால் நேரு பிறந்த நாள் ஆகும். ஆனால், நாளை சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் இன்றைய தினமே நேரு பிறந்த நாள் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சென்னையில் நடைபெற்ற விழாவில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முதல்வர் விஜய் கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளை வழங்கினர். அந்தவகையில் திருச்சி மாவட்டம், முசிறியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில், முசிறி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் விக்னேஷ் மற்றும் மாவட்ட பார்வையாளர் கிரண் குராலா ஐஏஎஸ், முசிறி சப்-கலெக்டர் சுஷ்ரீ சுவாங்கி குந்தியா ஆகியோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அதிகாரிகள் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தது மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Comments are closed.