Rock Fort Times
Online News

ஐ.சி.யூ-வில் சட்டம், ஒழுங்கு: கோமாவில் ஆட்சி நிர்வாகம்…- த.வெ.க அரசு மீது மு.க.ஸ்டாலின் சாடல்…!

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்து ஐ.சி.யூ-விலும், ஆட்சி நிர்வாகம் கோமாவிலும் இருப்பதாகத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ‘எக்ஸ்’ வலைதளப் பக்கத்தில் கடுமையாகச் சாடியுள்ளார். ஒரே நாளில் 17 கொலைகள் நடந்துள்ளதாகவும், குற்றவாளிகளுக்கு அச்சமும், காவல்துறையினருக்குப் பாதுகாப்பும் இல்லாத சூழல் நிலவுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், த.வெ.க-வைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுக்கு எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லை என்றும், பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக த.வெ.க எம்.எல்.ஏ மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பதவியின் மாண்பு குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்