Rock Fort Times
Online News

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கு ரூ.83 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் ஆதவ் அர்ஜூனா…!

தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் நடத்தப்பட்ட முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் சென்னை மாவட்ட அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி கோப்பையை வென்றுள்ளது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று(29-10-2026) கோலாகலமாக நடைபெற்று வரும் பரிசளிப்பு விழாவில் முதலமைச்சர் விஜய் நேரில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கும், சாம்பியன் பட்டம் வென்ற சென்னை மாவட்ட அணிக்கும் கோப்பைகளையும், பரிசுகளையும் வழங்கி வாழ்த்தி வருகிறார். விழாவில் பேசிய விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ், “ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வது தமிழ்நாட்டின் 100 ஆண்டு கால கனவாக இருந்து வருகிறது. அந்த இலக்கை அடையும் நோக்கில் இம்முறை முதன்முறையாக முதலமைச்சர் கோப்பை போட்டிகளுக்கு 27 லட்சம் பேர் பதிவு செய்து புதிய சாதனை படைத்துள்ளனர். முதலமைச்சர் விஜய் விளையாட்டுத் துறை சார்ந்த நிகழ்ச்சிகளில்தான் அதிக அளவில் ஆர்வம் காட்டிப் பங்கேற்று வருகிறார். அனைத்து மாவட்டங்களிலும் விளையாட்டு விடுதி கட்ட முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். ஸ்போர்ட்ஸ் மூலம் இளைஞர்கள் போதையில் இருந்து வெளியே வரவேண்டும் என்பதே நோக்கம். முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கு ரூ.83 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று பேசினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்