முதலமைச்சர் விஜய் நவம்பர் 2ம் தேதி புதுக்கோட்டை வருகை: ரூ.23 கோடியில் கட்டப்பட்ட பேருந்து நிலையத்தை திறந்து வைக்கிறார்..!
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், வருகிற நவம்பர் 2-ம் தேதி புதுக்கோட்டைக்குச் சென்று ரூ. 23 கோடியில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல், மாவட்டத்தில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்கமும் கட்டப்பட்டுள்ளது. இந்த இரு கட்டமைப்புகளையும் முதல்வர் விஜய் திறந்து வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, முதல்வரின் வருகையை ஒட்டி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ரவீந்திரகுமார் குப்தா உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் புதிய பேருந்து நிலையம் மற்றும் அருகிலுள்ள ஆயுதப்படை திடல் ஆகியவற்றை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனர்.
முதல்வரின் வருகையை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன. முதல்வர் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வந்து, இங்கிருந்து ஹெலிகாப்டர் வழியாக புதுக்கோட்டைக்குச் செல்லத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Comments are closed.