Rock Fort Times
Online News

அகில இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து சசிகலா நீக்கம்…!

அகில இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழக’த்திலிருந்து அதன் பொதுச் செயலாளர் வி.கே. சசிகலாவை கட்சியின் தலைவர் சக்ரவர்த்தி நீக்கியிருக்கிறார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா, உடனடியாக ராமதாஸ் தலைமையிலான பாமகவுடன் கூட்டணி சேர்ந்து சாத்தூர், முதுகுளத்தூர் உள்ளிட்ட சில இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தினார். இந்த தொகுதிகளில்
எல்லாம் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு இவர்களால் தடுக்கப்பட்டது. இந்தச் சூழலில் தற்போது கட்சியின் தலைவரே சசிகலாவை நீக்கி இருக்கிறார். இதுதொடர்பாக சக்கரவர்த்தி கூறுகையில்,
பத்து வருஷமா எம்பாட்டுக்கு ஒழுங்கா கட்சியை நடத்திட்டிருந்தேன். தேடி வந்தது அவங்கதான். சரி அம்மா கூட இருந்தவங்கங்கிற ஒரு மரியாதையில கட்சியை முறையா நடத்துவாங்கனு நம்பினதால பொதுச் செயலாளரா அவங்களை நியமிச்சு தேர்தலைச் சந்திச்சோம். சில தொகுதிகள்ல எங்க வேட்பாளர்கள் கணிசமான ஓட்டுக்களை வாங்கவும் செய்தாங்க. ஆனா தேர்தலுக்குப் பிறகு சசிகலாவை பார்க்க கூட முடியலை. நிர்வாகிகள் நியமனம், கூட்டம் என எதுவும் இதுவரை போடப்படவில்லை. அதனால சந்திச்சுப் பேசலாம்னு போயஸ் கார்டன் போனா வீட்டுக்குள்ளேயே விடமாட்டேங்குறாங்க.
பி.ஏ வந்து மேடம் வேலையா இருக்காங்கனு பதில் சொல்றார். பத்து முறையாவது போயிருப்பேன். வாசலைத் தாண்டி வீட்டுக்குள் என்னால் போக முடியலை. எடப்பாடி பழனிசாமிக்கு நீங்க ஊறுகாயா தொட்டுக்க நான் தான் கிடைச்சேனா? இது சரி வராதுனுதான் இப்ப அவங்களை நீக்கிட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்