மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில் குடும்பத் தகராறு காரணமாக, மீனவர் ஒருவர் தனது மனைவி மற்றும் மகனைக் கொலை செய்துவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்ட துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. முதற்கட்டத் தகவல்களின்படி, குடும்பத்தில் ஏற்பட்ட திடீர் தகராறு காரணமாக இந்தக் கொடூரச் செயலைச் செய்துவிட்டு அந்த மீனவர் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed.