Rock Fort Times
Online News

திருச்சி, பீமநகரில் பிரபல மணப்புரம் கோல்டு பைனான்ஸ் 1318- வது கிளை திறப்பு விழா கோலாகலம்… * ராக்போர்ட் டைம்ஸ் முதன்மை செய்தி ஆசிரியர் எஸ்.ஆர். * லெஷ்மி நாராயணன் திறந்து வைத்தார்..!

இந்தியா முழுவதும் மணப்புரம் கோல்டு பைனான்ஸ் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டத்தில் டிவிஎஸ் டோல்கேட், சுப்பிரமணியபுரம், சுந்தர் நகர், கே.கே.நகர், கருமண்டபம், புத்தூர், உறையூர், சத்திரம் பேருந்து நிலையம், சிந்தாமணி பஜார், திருவானைக்காவல், மண்ணச்சநல்லூர், லால்குடி, பெட்டவாய்த்தலை
ஆகிய இடங்களில் இந்த நிதி நிறுவனத்தின் கிளைகள் செயல்பட்டு வருகின்றன. அதனைத் தொடர்ந்து 1318- வது கிளை திறப்பு விழா திருச்சி பாலக்கரை, பீம நகரில் இன்று(23-10-2026) மாலை 3 மணி அளவில் கோலாகலமாக நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக திருச்சி ராக்போர்ட் டைம்ஸ் வார இதழ் முதன்மை செய்தி ஆசிரியர் எஸ்.ஆர்.லெஷ்மி நாராயணன் பங்கேற்று புதிய கிளையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து குத்துவிளக்கேற்றி கேக் வெட்டினார். இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் தமிழ்நாடு மண்டல தலைவர் நித்திஷ் விஸ்வநாத், திருச்சி மண்டல மேலாளர் முத்துக்குமார், ஏரியா மேலாளர் குமரேசன், கிளை மேலாளர் உதய், பாதுகாப்பு பிரிவு மண்டல மேலாளர் ராஜு மற்றும் வைரக் கற்கள் பிரபல தொழிலதிபர்
ஜெ. பிரேம் ஆனந்த், காதர், பைசல் உள்ளிட்ட பலர் பங்கேற்று சிறப்பித்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்