ஸ்ரீரங்கத்தில் நாளை(அக்.24) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… * படித்த இளைஞர்கள், இளம் பெண்கள் பயன்பெற அமைச்சர் ரமேஷ் அழைப்பு..!
ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நாளை(24-10-2026) நடைபெற உள்ளது. இதுதொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய்யின் நல்லாட்சியில், கடந்த மாதங்களில் ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்களில், ஏராளமான இளைஞர்கள் தங்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருமாறு கோரிக்கை மனுக்களை அளித்திருந்தனர். இளைஞர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருவானைக்காவல் ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை முகாம் நடைபெறுகிறது. ஸ்ரீரங்கம் தொகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், பட்டதாரிகள் மட்டுமின்றி, திருச்சிராப்பள்ளி மாவட்டம் முழுவதும் உள்ள இளைஞர்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் இந்த முகாமில் பங்கேற்க உள்ளன. இளைஞர்களின் எதிர்காலத்தை வளமாக்கும் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, தங்களுக்கான வேலைவாய்ப்புகளைப் பெற்று வாழ்வில் முன்னேறிட அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.