பணிகள் நிறைவு: திருச்சி பழைய காவேரி பாலம் மீண்டும் போக்குவரத்துக்கு திறப்பு… * வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி!
திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பழைய காவேரி பாலத்தில் பழுது ஏற்பட்டதால் கடந்த ஜூன் 25ம் தேதி மூடப்பட்டது. இதனால், இந்த நெடுஞ்சாலை ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டதால்
தினந்தோறும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த பாலத்தை சீரமைக்கும் பணிகள் ரூ.10 கோடியில் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக பாலத்தின் பழைய தாங்கு உருளைகள் (Bearings) மற்றும் 16 ஸ்ட்ரிப் சீல் விரிவாக்க இணைப்புகள் மாற்றப்பட்டன. இந்த பணிகள் முழுமையாக நிறைவு பெற்ற நிலையில் இன்று (அக்டோபர் 15) போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது . திருச்சி மாநகர காவல்துணை ஆணையர் மணிகண்டன் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டு
பாலத்தை போக்குவரத்துக்கு அர்ப்பணித்தனர். இந்த பாலம் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Comments are closed.