தமிழகத்தில் அரிசி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
“என் வாழ்க்கையையே நான் ரேஷன் கடையில்தான் செலவழித்து இருக்கிறேன். மற்றவர்களைப் போல நானும் ரேஷன் கடைகளில் வரிசையில் நின்று பொருட்கள் வாங்கியவன் தான். இன்று அமைச்சராக வந்திருக்கிறேன். ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து அரிசி வரத்து குறைந்ததால்
தமிழகத்தில் விலை ஏறியுள்ளது என்றுதான் கூறினேன். நான் பேசியதை முழுமையாக கேட்காமல், எனக்கு சவால் விடுகின்றனர். 2023ல் அரிசி விலை கிலோவுக்கு ரூ.53 என இருந்தது. 2024ல் ரூ.60, 2025ல் 65 என விற்பனை செய்யப்பட்டது. உணவுப்பொருட்களின் விலை படிப்படியாக உயர்ந்துள்ளது. இதெல்லாம் முன்னாள் அமைச்சர்கள் கவனித்து சரி செய்து இருக்க வேண்டும். சன்ன ரக அரிசியை தான் மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில்
25 ஆயிரம் மெட்ரிக் டன் சன்ன ரக அரிசி 250 அமுதம் அங்காடிகள் மூலம் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். சில அரசியல் கட்சிகளை சேர்ந்த வியாபாரிகள் உணவுப் பொருட்களை குடோன்களில் பதுக்குகின்றனர். இதனால் விலைவாசி உயர்வு ஏற்படுகிறது. உணவு பதுக்கலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு அவர்
கூறினார்.

Comments are closed.