Rock Fort Times
Online News

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை நாளை தொடங்குகிறது; மணப்பாறையில் இன்று பலத்த மழை…!

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை நாளை (அக். 15) தொடங்குவதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்தாண்டு அக்டோபர் 16-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், ஆந்திரத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. இந்த நிலையில், நாளை முதல் வடகிழக்குப் பருவமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று(அக். 14) மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராமநாதபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் மிகக் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலூர், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, தேனி, விருதுநகர் ஆகிய நான்கு மாவட்டங்களில் நாளை ஆரஞ்சு எச்சரிக்கையும், 15 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என்று தெரிவித்துள்ளது.

மணப்பாறையில் பலத்த மழை,

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் கடந்த சில தினங்களாகவே வெப்பத்தின் தாக்கம் அதிக அளவில் இருந்து வரும் சூழலில் இன்று வெப்பத்தின் தாக்கம் குறைந்து சாரல் மழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரத்தில் பலத்த காற்று இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது. சுமார் 45 நிமிடங்களுக்கும் மேலாக பெய்த மழையால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மணப்பாறை பேருந்து நிலையம் எதிரே மழை நீர் கழிவு நீருடன் கலந்து குளம் போல தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியதுடன் வாகனங்கள் ஊர்ந்து சென்றது. மழை நீருடன் சாக்கடை நீர் கலந்து சென்றதால் துர்நாற்றம் வீசியது. திடீர்
மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து சீதோசன
நிலையில் மாற்றம் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்