10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 2026-27 கல்வியாண்டுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணையை வெளியிட்டார் அமைச்சர் ராஜ்மோகன். மார்ச் 3 முதல் 29 வரை 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்றும், மார்ச் 17 முதல் ஏப்ரல் 12 வரை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் ,மார்ச் 5ம் தேதி முதல் ஏப்ரல் 1ம் தேதி வரை 11ம் வகுப்பு தேர்வு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
12-ம் வகுப்பு :
தமிழ் – 03.03.2027
ஆங்கிலம் – 08.03.2027
வேதியியல்/ கணக்கு பதிவியல்/ புவியியல் – 12.03.2027
கம்ப்யூட்டர் சயின்ஸ்/ பயோ கெமிஸ்ட்ரி/ கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ்/ கம்யூனிகேட்டங் ஆங்கிலம்/ எதிக்ஸ் அண்டு கல்ச்சர்/ அட்வான்ஸ்டு லாங்குவேஜ்/ ஹோம் சயின்ஸ்/ பொலிட்டிகள் சயின்ஸ்/ ஸ்டாட்டிக்ஸ்/ நர்சிங்/ பேசிக் எலக்ட்ரிகல் என்ஜினீரிங் – 15.03.2027
உயிரியல்/ தாவரவியல்/ வரலாறு/ வணிக கணக்கியல்/ பேசிக் எலெக்ட்ரானிக்ஸ் என்ஜீனிரிங் – 19.03.2027
இயற்பியல், பொருளாதாரம், எம்ப்லாயபிலிட்டி ஸ்கில்ஸ் – 23.03.2027
கணிதம், வணிகவியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து, உணவுமுறை, வேளாண் அறிவியல், நர்சிங் (பொது), உணவு சேவை மேலாண்மை – 29.03.2027
10-ம் வகுப்பு :
தமிழ் 17.03.2027
ஆங்கிலம் 25.03.2027
கணிதம் 31.03.2027
அறிவியல் 05.04.2027
சமூக அறிவியல் 09.04.2027.

Comments are closed.