தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதேபோல புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தொகுதியிலும் இன்று(09-10-2026) காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தற்போது வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் வெற்றி பெற்றார். என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் சுமார் 7 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2-வது இடத்தை காங்கிரஸ் வேட்பாளர் விநாயகம் பிடித்தார். திமுக வேட்பாளர் சேது 3-வது இடத்தையும், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சலீம் 4-வது இடத்தையும், நாதக வேட்பாளர் கார்த்திக் குமாரி 5-வது இடத்தையும் பெற்றனர்.

Comments are closed.