Rock Fort Times
Online News

சொத்து விவரங்களை தாக்கல் செய்தால் தான் உயர் பதவி: அரசு ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு…!

தமிழக அரசு ஊழியர்கள் தங்களின் அசையும், அசையா சொத்துகள், சேமிப்பு, கடன் உள்ளிட்ட விவரங்களை வருகிற 31-ம் தேதிக்குள் IFHRMS இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். வேறு நபர்களின் பெயரில் சொத்துகள் இருந்தாலும், அது தொடர்பான விவரங்களையும், அவர்களுடனான உறவையும் குறிப்பிட வேண்டும். காலக்கெடுவுக்குள் சொத்து விவரங்களைத் தாக்கல் செய்தவர்களின் பெயர்கள் மட்டுமே பதவி உயர்வுப் பட்டியலில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சொத்து விவரங்களைத் தாக்கல் செய்யாதவர்கள் நன்னடத்தை விதிகளை மீறியதாகக் கருதப்படுவர். ஏற்கனவே கடந்த, 2010ல், தி.மு.க ஆட்சியின் போது, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவின் பரிந்துரை அடிப்படையில், ‘அரசு ஊழியர்கள் பணியில் சேர்ந்த மூன்று மாதத்துக்குள் தங்களின் சொத்து விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும். ‘பின், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிடப்பட்டது. அந்த உத்தரவு முறையாக அமல்படுத்தப்படவில்லை. இந்நிலையில் தான், புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க., அரசு, அரசு ஊழியர்கள் சொத்து விபரங்களை, வீடுகள், நிலங்கள், நகைகள், கார், இருசக்கர வாகனங்கள், ரொக்கம், கடன் என, அனைத்து விபரங்களையும் அக்., 31க்குள், அரசு இணையதளத்தில் பதிவு செய்ய உத்தரவிட்டு உள்ளது. அரசு ஊழியர்கள், பினாமி பெயரில் உள்ள சொத்துக்கள் உட்பட, அனைத்து சொத்து விபரங்களை தெரிவிக்க வேண்டும், இல்லாவிட்டால் பதவி உயர்வு கிடையாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு அரசு ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்