Rock Fort Times
Online News

தாராபுரத்தில் ‘விசில்’ சின்னத்திற்கு வாக்களிக்க மூதாட்டியை வற்புறுத்தியதாக புகார்: தேர்தல் அலுவலர் மாற்றம்…!

தமிழ்நாட்டில் காலியாகவுள்ள தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று(06-10-2026) காலை முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தாராபுரம் தொகுதிக்குட்பட்ட கொழிஞ்சிவாடி வாக்குச்சாவடியில் வாக்களிக்க சென்ற மூதாட்டியிடம், அங்கு தேர்தல் பணியில் இருந்த அலுவலர், விசில் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கூறியதாக புகார் எழுந்தது. இதனால் வாக்குப்பதிவு மையத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தேர்தல் அலுவலர் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முகவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சில மணி நேரம் அங்கு வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. தொடர்ந்து புகாருக்குள்ளான அலுவலர் மீது கோட்டாட்சியரிடம் திமுகவினர் புகார் அளித்ததை தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக அவர் விசாரணை மேற்கொண்டார். விசாரணையை தொடர்ந்து பணியில் இருந்த வாக்குச்சாவடி அலுவலர் தங்கமணி மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக ராஜம்மாள் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து தற்போது அந்த வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்