Rock Fort Times
Online News

தமிழகத்தில் 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்…!

நிர்வாக நலன் கருதி 3 ஐஏஎஸ் அதிகாரிகள் இன்று (06.10.2026)
இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பேரூராட்சிகள் இயக்குநரகத்தில் ஓராண்டு காலத்திற்கு தற்காலிகமாக உருவாக்கப்பட்டுள்ள புதிய பேரூராட்சிகள் இயக்குநர் பதவிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, தமிழ்நாடு எல்காட் நிறுவனத்தின் மேலாண் இயக்குநராகப் பணியாற்றி வந்த கே.பி. கார்த்திகேயன், தற்போது புதியதாக உருவாக்கப்பட்டுள்ள பேரூராட்சிகள் இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். இவருக்கு முன்னதாக இப்பொறுப்பில் இருந்த பிரியங்கா, தற்போது மின்னணு ஆளுமை முகமையின் இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இவர் தமிழ்நாடு மின்னணு ஆளுமை முகமையின் முதன்மைச் செயல் அதிகாரியாகவும் கூடுதல் பொறுப்பைக் கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், வெளிநாட்டு அயல் பணியை முடித்துக் கொண்டு தமிழக அரசுப் பணிக்குத் திரும்பியுள்ள பி. விஷ்ணு சந்திரன், கே.பி. கார்த்திகேயனுக்கு பதிலாக தமிழ்நாடு எல்காட் நிறுவனத்தின் புதிய மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான அயல் பணி விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் தனியாகப் பின்பற்றப்படும் என்றும், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பேரூராட்சிகள் இயக்குநர் பதவியானது சமூக நலத்துறை இயக்குநர் பதவிக்கு இணையான தகுதியைக் கொண்டது என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்