“பறந்து வந்த அந்த போன் கால்”, வேட்பாளர் சத்தியபாமாவிடம் கூறியது என்ன?* அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்…!
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் சத்திய பாமாவை ஆதரித்து அக்கட்சியின் தலைவரும், முதல்- அமைச்சருமான விஜய் நேற்று (செப்டம்பர் 30) தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது சத்தியபாமா பேசும் போது, திமுகவுடன் எடப்பாடி பழனிசாமி கூட்டணி வைக்க முடிவு செய்தது தனக்கு பிடிக்கவில்லை அதனால் தான் கட்சியில் இருந்து விலகினேன் என்று தெரிவித்தார். இதன் காரணமாக என்னை சமூக வலைதளங்களில் கடந்த இரண்டு மாதங்களாக ஒரு பெண் என்றும் கூட பாராமல் ஆபாசமாகவும் அவமரியாதையாகவும் விமர்சித்து வருகின்றனர் எனக் கூறி கண்ணீர் விட்டு அழுதார். உடனடியாக அருகில் நின்ற முதலமைச்சர் விஜய் அவரை தேற்றினார். இது முழுக்க முழுக்க செட்டிங்ஸ்,
ஒரு போன் கால் வருகிறது. அந்த போன் காலை எடுத்துப் பேசும் அமைச்சர் ராஜ்மோகன், வேட்பாளரிடம் ஏதோ கூறுகிறார், உடனே அவர் கதறி அழுகிறார், முதல்வர் அவரை தேற்றுகிறார் என்று சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலானது. இது திட்டமிட்ட நாடகம் என எதிர்க்கட்சிகள் கூறிவரும் நிலையில் தவெகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இதுதொடர்பாக அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளிக்கையில், என் தாயின் மீது ஆணையாகச் சொல்கிறேன்… முதலமைச்சர் நிற்கிறார், மக்கள் நிற்கிறார்கள் சீக்கிரம் பேசி முடிக்க சொல்லுங்கள் என்று தான் நிகழ்ச்சி ஒருணக்கிணைப்பாளர்கள் சொன்னார்கள். அதைத்தான் வேட்பாளர் சத்தியபாமாவிடம் கூறினேன். மக்கள் வெகுநேரமாக காத்திருப்பதால் விரைவாக பேச வேண்டும் என கூறினேன்; அரசியல் காரணத்திற்காக பெண்ணின் கண்ணீரை தவறாக சித்தரிக்கிறார்கள் என விளக்கம் அளித்துள்ளார்.

Comments are closed.