திருச்சி, கே.கே.நகரில் 175 வீடுகளுடன் பிரம்மாண்டமான அப்பார்ட்மெண்ட்… ஜெயம் எம்பையர் ஹேண்ட் ஓவர் நிகழ்ச்சி அக்டோபர் 2ம் தேதி நடக்கிறது..!
திருச்சியில் இயங்கி வரும் முன்னணி கட்டுமான நிறுவனங்களில் ஒன்று ஜெயம் பில்டர்ஸ். கடந்த 23 ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்பட்டு வரும் இந்நிறுவனம் இதுவரை பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகளையும், தனி வீடுகளையும், வணிக வளாகங்களையும் கட்டியுள்ளது. அந்த வகையில் தற்போது திருச்சி, கே.கேநகர், எல்ஐசி காலனி, பாண்டியன் நகரில் ஜெயம் எம்பையர் என்கிற பிரமாண்டமான அடுக்குமாடி குடியிருப்பை கட்டியுள்ளது. மொத்தமாக 175 வீடுகளைக் கொண்ட இந்த கேட்டட் கம்யூனிட்டி வளாகத்தில் கிளப் ஹவுஸ், நீச்சல் குளம், சினிமா தியேட்டர், யோகா ஹால், சூப்பர் மார்க்கெட், ஜிம், இண்டோர் கேம்ஸ் ஹால், பேட்மிண்டன் அரங்கம், சீனியர் சிட்டிசன் கார்னர், குழந்தைகளுக்கான விளையாட்டு மையம், ரூஃப்டாப் கார்டன் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தனியாக சார்ஜிங் மையமும் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த பிரமாண்ட அடுக்குமாடி குடியிருப்பின் ஹேண்ட்ஓவர் நிகழ்ச்சி மற்றும் கிளப்ஹவுஸ் திறப்புவிழா நாளை மறுநாள்(02-10-2026) வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஜெயம் பில்டர்ஸின் நிர்வாக இயக்குனர்களான ஏ. ஆனந்த் மற்றும் ஜெயராணி மற்றும் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

Comments are closed.