Rock Fort Times
Online News

திமுக எங்களை தரம் தாழ்த்தி விமர்சிக்க, விமர்சிக்க தவெக உயர்ந்து கொண்டே இருக்கும்…* தாராபுரம் பிரச்சாரக் கூட்டத்தில் விஜய் பேச்சு..!

தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்கிறது. அக்டோபர் 6ம் தேதி வாக்குப்பதிவும், 9ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணிக்கையும் நடைபெறுகின்றன. இந்நிலையில் தாராபுரம் தொகுதி தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து முதல்வர் விஜய் இன்று (30-09-2026) பரப்புரை மேற்கொண்டார். கூட்டத்தில் முதல்வர் விஜய் தேசியதாவது; சாதாரண மக்களை தேர்தலில் நிற்க வைத்து குறுநில மன்னர்களை தவெக தோற்கடித்திருக்கிறது. மன்னராட்சி மனப்பான்மை எங்களுக்கு இல்லை. கொளத்தூர் மக்கள் ஓட்டுபோடாததற்கு நன்றி என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சொன்னது அந்த குழந்தையே நீங்கள்தான் என சொல்வது போல இருக்கு. இனிவரும் தேர்தல்களிலும் ஓட்டு போடாத மக்களுக்கு திமுக தலைவர் நன்றி என சொல்லவேண்டி இருக்கும். தீய சக்தி திமுகவுடன் அதிமுக மறைமுக கூட்டணி வைத்துள்ளது. தீய சக்தி திமுகவின் பினாமிபோல் சுய நலமாக சுற்றுபவர்கள் நாம் கிடையாது. கடவுள் நம்பிக்கை எங்களுக்கு
உண்டு, யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் ஒரு போதும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல. கிருஷ்ண ஜெயந்திக்கும், கிறிஸ்துமஸ்க்கும், பக்ரீத்துக்கும் நாங்கள் வாழ்த்து சொல்வோம். மற்றவர்கள் போல் வெளி வேஷம் போட்டுக் கொண்டு பம்மிக் கொண்டு திமுக போல் இருக்க மாட்டோம். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,, அவன், இவன் என ஒருமையில் பேசுகிறார், நான் பாசமாக பேசுகிறேன். ஆபாச நதி, வன்ம நதியை வளர்த்து வைத்திருக்கிறார் ஸ்டாலின். நீங்கள் பேசப் பேச நாங்கள் உயர்வோம். தரம் தாழ்த்தி எங்களை விமர்சிக்க விமர்சிக்க தவெக உயர்ந்து கொண்டே இருக்கும்.

பாஜகவின் கிளையாக இருந்த ஒரு கட்சி, தற்போது திமுகவின் கிளையாக மாறியுள்ளது. திமுகவும், அதிமுகவும் ஒன்று தான், இருவருக்கும் ஒரே ஓனர் தான். யாரை எதிர்த்து எம்ஜிஆர் கட்சி தொடங்கினார்? யாரை எதிர்த்து ஜெயலலிதா அரசியல் செய்தார்? இருவரையும் அவமானப்படுத்துவது போல் திமுகவுடன் அதிமுக சேர்ந்து சதி செய்கிறது. எம்எல்ஏவாக இருந்து கொண்டு சத்தியபாமா தவெகவுக்கு வரவில்லை. ராஜினாமா செய்துவிட்டு தான் வந்தார். இதில் எந்த குதிரை பேரமும் நடக்கவில்லை. சர்க்காரியா கமிஷன் பற்றி பேசினால் அதிமுகவுக்கு ஏன் கோபம் வருகிறது. திமுகவுக்கு முட்டு கொடுக்கிறது அதிமுக. திமுகவை எதிர்ப்பது தவெக மட்டும்தான். திமுக, அதிமுக பொய்களை நம்பாதீர்கள். எம்ஜிஆர்.க்கும் ஜெயலலிதாவுக்கும் துரோகம் செய்த அதிமுகவுக்கு ஓட்டு போடுவீர்களா?. கொங்கு பகுதி மக்கள் சத்தியத்தின் பக்கம் இருப்பீர்கள், அதேபோல இந்த தேர்தலில் நமது சத்தியபாமா பக்கம் இருங்கள். அவரை வெற்றி பெறச் செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்