Rock Fort Times
Online News

திருச்சி, கல்லுக்குழி டாஸ்மாக் கடையில் தினம்தோறும் கட்டுக்கடங்காத கூட்டம்; வாகன ஓட்டிகளிடம் தகராறு செய்யும் போதை ஆசாமிகள்… * மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்..!

திருச்சி தலைமை தபால் நிலைய பகுதியில் இருந்து கல்லுக்குழி மேம்பாலத்தில் ஏறி இறங்கும் இடத்தில் இடதுபுறம் டாஸ்மாக் கடை {எண் 10230} ஒன்று செயல்படுகிறது. இந்த கடை திறக்கப்படும் நேரமான மதியம் 12 மணியிலிருந்து கடை மூடப்படும் நேரமான இரவு 10 மணி வரை கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கிறது. இந்த கல்லுக்குழி மேம்பாலத்தின் வழியாகத்தான் டிவிஎஸ் டோல்கேட், ஏர்போர்ட், மாத்தூர், பொன்மலை, பொன்மலைப்பட்டி, ஓ. எப்.டி., கீரனூர் உள்ளிட்ட ஊர்களுக்கு ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. அதேபோல, டாஸ்மாக் கடை அமைந்துள்ள இந்த பகுதியில் சேதுராமன் பிள்ளை காலனி உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகள், அரசு குடியிருப்புகளும் அமைந்துள்ளன. இங்கு ஏராளமான மக்கள்
வசித்து வருகின்றனர். இந்த டாஸ்மாக் கடைக்கு வருகை தரும் மது பிரியர்கள் மது அருந்திவிட்டு போதையில் சாலையில் நின்று
கொண்டு அந்த வழியாக வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகளிடம் தகாத வார்த்தைகளால் திட்டி தகராறு செய்கிறார்கள்.
இதனால், தினம் தினம் இந்த பகுதியில் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். பெண்கள் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கிவிட்டு நிம்மதியாக வீடு திரும்ப முடிவதில்லை.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் திருச்சி மத்திய பேருந்து நிலையப் பகுதியில் செயல்பட்ட 4-க்கும் மேற்பட்ட மது கடைகளை தமிழ்நாடு அரசு மூடி உள்ளது. அங்குள்ள கூட்டமும்
இந்த கடைக்கு படையெடுத்து வருவதால் மாலை நேரங்களில் கட்டுக்கடங்காத கூட்டம் கூடுகிறது. மது பிரியர்களால் பொதுமக்களுக்கும்போக்குவரத்துக்கும் கடுமையான இடையூறு ஏற்படுகிறது. ஆகவே குடியிருப்பு மற்றும் முக்கியமான சாலை பகுதியில் அமைந்துள்ள இந்த டாஸ்மாக் கடையை உடனடியாக
மூடவோ அல்லது இந்த இடத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க காவலர்களையோ நியமிக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்