Rock Fort Times
Online News

‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’: திருச்சியில் வாரிய தலைவர் கு.ப.கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்…!

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தாய் மாமன் தங்க
மோதிரம் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு இன்று(28-09-2026) தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில் முதல்வர் ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தனர். அந்தவகையில் திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்வில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவர் கு.ப.கிருஷ்ணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரதீப் தாயள் ஆகியோர் கலந்துகொண்டு குழந்தைகளுக்குத் தங்க மோதிரங்களை அணிவித்தனர். இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் பொன்மணி, திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் நவல்பட்டு விஜி, த.வெ.க. மாநில துணை பொதுச்செயலாளர் என்.ஆர்.சிவபதி, அரசு மருத்துவமனை முதல்வர் குமரவேல், கண்காணிப்பாளர் அருண்ராஜ் மற்றும் அரசு அலுவலர்கள், த.வெ.க. நிர்வாகிகள் பங்கேற்றனர்.
நிகழ்விற்கு பின்னர், வாரிய தலைவர் கு.ப. கிருஷ்ணன் அளித்த பேட்டியில், தாயுமானவர் மண்ணில் தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்துள்ளார். அந்த வகையில் திருச்சியில் உள்ள மக்களுக்கு தங்க மோதிரம் வழங்கும் வாய்ப்பு எங்கள் எல்லோருக்கும் கிடைத்ததை நாங்கள் பெருமையாக கருதுகிறோம் என தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்