புதுக்கோட்டை மாவட்டம், பெரம்பூர் பகுதியில் உள்ள இந்தியன் கேஸ் ஏஜென்சிக்கு லோடு எடுத்து சென்ற மோகன்ராஜ் என்ற ஓட்டுநர், கேஸ் சிலிண்டர் ஏற்றுவதற்கான ரசீது தொடர்பான பிரச்சினையில் தாக்கப்பட்டதாக சக ஓட்டுநர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலை கண்டித்தும், அவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் திருச்சி, இனாம் குளத்தூர் எரிவாயு நிரப்பும் ஆலையில் பணியாற்றும் சுமார் 250 ஓட்டுநர்கள் இன்று(26-09-2026) தங்களது பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஓட்டுநர்கள் லாரிகளை இயக்காமல் நிறுத்தி வைத்துள்ளதால், தமிழகத்தில் கேஸ் சிலிண்டர் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஓட்டுநர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.