அக்டோபர் 11-ம் தேதி தமிழகம் வருகிறார், பிரதமர் மோடி..? * வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார்..!
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 118.1 கி.மீ. தொலைவுக்கு இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் முதற்கட்டமாக, வடபழனி முதல் பூந்தமல்லி வரையிலான 14.6 கி.மீ. வழித்தட மெட்ரோ பணிகள் முடிவடைந்து, ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தின் அனுமதியை பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்த மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைப்பதற்கான தேதியை இறுதி செய்யுமாறு மத்திய அரசுக்கு மெட்ரோ நிறுவனம் கோரிக்கை விடுத்திருந்தது.
எனினும், சட்டமன்றத் தேர்தல், புதிய அரசு பதவியேற்பு உள்ளிட்ட காரணங்களால் இந்த வழித்தடத்தின் தொடக்க தேதி தொடர்ந்து தள்ளிப் போய் கொண்டே இருந்தது. இந்நிலையில், வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையை தொடங்கும் தேதி தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.அதன்படி, வருகிற அக்டோபர் மாதம் 11-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி இந்த மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வடபழனியில் இருந்து பூந்தமல்லிக்கு பைக், கார் அல்லது பேருந்தில் செல்ல குறைந்தபட்சம் ஒரு மணிநேரம் முதல் ஒன்றரை மணிநேரம் வரை ஆகும். ஆனால், இந்த மெட்ரோ ரயில் மூலம் பயண நேரம் வெறும் 25 நிமிடங்களாக குறையும்.

Comments are closed.