‘ஜெம்’ வீரமணி வழக்கை அரசியலாக்க வேண்டாம்: விவாதங்கள் நடத்தவும் தடை…* சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..!
‘ஜெம்’ வீரமணி தொடர்பான வழக்கை அரசியலாக்க வேண்டாம் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் திமுகவினருக்கு அறிவுறுத்துமாறு இருதரப்பு வழக்கறிஞர்களிடமும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த வழக்கைத் தொடர அனுமதி கோரி திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், வழக்கின் விசாரணையை அரசியல் ரீதியாக கொண்டு செல்லாமல், சட்டத்தின் அடிப்படையில் அணுக வேண்டும் என அறிவுறுத்தியது. வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விசாரணை குறித்து நீதிமன்றம் பின்னர் முடிவு செய்ய உள்ளது.
விவாதங்கள் நடத்தவும் தடை :
இது ஒருபுறம் இருக்க ஜெம் வீராமணி வழக்கு பற்றி ஊடகங்கள் விவாதங்கள் நடத்தக் கூடாது எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பத்திரிகை சுதந்திரம் என்பது ஊடக விசாரணை நடத்துவதற்கான உரிமை அல்ல என்று குறிப்பிட்ட நீதிபதி லட்சுமிநாராயணன், வழக்கின் முன்னேற்றம் குறித்து மக்கள் அறிய காவல்துறை வாரம் ஒருமுறை செய்திக் குறிப்பு வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். இதேபோல வீரமணி வழக்கில் தொடர்புடைய வீடியோக்களை ஊடகங்களும், சமூக வலைதளங்களும் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. செய்திகள் மற்றும் சமூக வலைதளங்களில் இதுதொடர்பான விடியோக்கள் பரவுவதைத் தடுக்கும் வகையில் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துளது.

Comments are closed.