Rock Fort Times
Online News

திருச்சியில் “கிரடாய்” ஃபேர்புரோ கண்காட்சி…* அமைச்சர் எஸ். ரமேஷ் தொடங்கி வைத்தார்..!

இந்திய ரியல் எஸ்டேட் டெவெலப்பர்ஸ்களின் கூட்டமைப்பான “கிரடாய்” அமைப்பின் சார்பில் மூன்று நாட்கள் நடைபெறும் ஃபேர் புரோ – 2026 கண்காட்சி இன்று(25-09-2026) தொடங்கியது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடைபெறும் இந்தக் கண்காட்சியை, தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ். ரமேஷ் தொடங்கி வைத்தார். விழாவிற்கு வருகை தந்தவர்களை கிரடாய் அமைப்பின் திருச்சி கிளை சேர்மன் ஆர்.மனோகரன், தலைவர் நஸ்ருதீன், துணைத்தலவர் எம்.இளமுருகன், செயலாளர் எம்.முகமது இப்ராஹிம், இணைச் செயலாளர் பி.முருகானந்தம்,பொருளாளர் கே.கார்த்திக் ஆகியோர் வரவேற்றனர். நிகழ்ச்சியில் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ஆர். கதிரவன், பாரத் பிளாட் பிரமோட்டர்ஸ் நூர் முகமது, ஜெயம் பில்டர்ஸ் ஆனந்த், விக்னேஷ் பிளாட் பிரமோட்டர்ஸ் கோபிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சியில், திருச்சியைச் சேர்ந்த 32-க்கும் மேற்பட்ட கட்டுமான மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் ஸ்டால்கள் இடம் பெற்றுள்ளன.
வீட்டுமனைகள், தனி வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் தொடர்பான பல்வேறு திட்டங்கள் ஒரே இடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதால், திருச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வீடு அல்லது மனை வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு இது பயனுள்ள வாய்ப்பாக அமையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், வீடு மற்றும் சொத்து வாங்க விரும்புவோருக்கு தேவையான வீட்டுக்கடன் மற்றும் நிதி வசதிகள் குறித்த ஆலோசனைகளை வழங்கும் வகையில் பல்வேறு வங்கிகளின் ஸ்டால்களும் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், தற்போதைய ட்ரெண்டிற்கு ஏற்ப வீடு கட்டுவதற்கான கட்டுமானப் பொருட்கள், இன்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியர் வடிவமைப்புகள், நவீன தொழில் நுட்பங்கள் மற்றும் செலவைக் குறைத்து வீடுகளை வடிவமைக்கும் முறைகள் குறித்த தகவல்களை வழங்கும் நிறுவனங்களின் ஸ்டால்களும் இடம் பெற்றுள்ளன.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்