Rock Fort Times
Online News

வீரமணி வழக்கை தேர்தல் கருவியாக பயன்படுத்துவதா?… * முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்..!

மதுராந்தகத்தில் இன்று(25-09-2026) த.வெ.க வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முதலமைச்சர் விஜய் பேசினார். அப்போது அவர் பேசுகையில், இங்கே இன்னொரு கொடுமை நடந்து கொண்டிருக்கிறது. அதை பற்றி பேச வேண்டாம் என்றுதான் நினைத்தேன். நம்முடைய தமிழ்நாட்டு இளம் பெண்களை, பச்சைப் பிள்ளைகளை ஒருத்தன் இத்தனை வருடங்களாக சீரழித்துக் கொண்டிருந்தான். அந்த வழக்கு போன தி.மு.க ஆட்சியில் வந்தும் அந்த வழக்கை அந்த அத்தியாயத்தை
அந்த வழக்கின் வரலாற்றையே மூடி மறைத்து விட்டார்கள். இதற்காக உள்ளுக்குள்ளே என்ன டீலிங் நடந்தது. தமிழ்நாடே கேட்கிறது, வாயை திறங்கள், ஸ்டாலின் சார். உங்களோடு சேர்ந்து அந்த மற்றும் பலரும் வாயை திறக்காமல் இருக்கிறார்கள். இதில் கூடவா கூட்டு, இதுல கூடவா கூட்டு சேர்ந்து கொண்டு வாய் திறக்காமல் இருப்பீர்கள் என்று ஆவேசமாக பேசினார். இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். ஜெம் வீரமணி கைதாகி 27 நாட்களுக்குப் பிறகு, மதுராந்தகம் தேர்தல் பிரச்சாரத்தில் போக்சோ வழக்கைக் குறிப்பிட்டுத் த.வெ.க தலைவர் விஜய் “நமது சின்னம் விசில் சின்னம்” என்று வாக்கு சேகரித்துள்ளார். இந்த நிலையில், “சிறுமிகளுக்கு ஏற்பட்ட துயரத்தைத் தேர்தல் கருவியாகப் பயன்படுத்தும் இழிவான செயலை ஆளுங்கட்சியினர் நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்