டெண்டர் மறுக்கப்பட்டதால் ஆத்திரம்: மணப்பாறை நகராட்சியில் ரகளையில் ஈடுபட்ட எம்.எல்.ஏ. கதிரவனின் சகலை… (வீடியோ இணைப்பு)
திருச்சி மாவட்டம், மணப்பாறை தொகுதி த.வெ.க சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் ஆர்.கதிரவன். இவரது மைத்துனரான இளம் பரிதி என்பவர் மணப்பாறை நகராட்சி பணியில் டெண்டர் எடுக்க விண்ணப்பித்திருந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், காரணமின்றி தனது நிறுவனத்தை டெண்டரில் இருந்து எப்படி நிராகரிக்கலாம் எனக்கூறி மணப்பாறை நகராட்சி சுகாதார அலுவலரிடம் இவர் வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து அப்பகுதி விபரப் புள்ளிகளிடம் நாம் விசாரித்தபோது…” மணப்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினரான கதிரவனின் மைத்துனர் சென்னை மந்தைவெளியில் “டே அண்ட் டே” என்கிற மேன் பவர் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் மணப்பாறை நகராட்சியில் டெங்கு கொசு உற்பத்தியை தடுக்க பணியாளர்களை ஈடுபடுத்தும் அரசு டெண்டரில் விண்ணப்பித்திருந்தார்.
அரசு நிர்ணயித்திருந்த டெண்டர் கட்டணத்தை விட 19% குறைவான தொகையை கோட் செய்திருந்தும், இவருக்கு இந்த டெண்டர் ஒதுக்கப்படவில்லை. மேலும் இதுகுறித்த எந்த முறையான தகவலும் தெரிவிக்கப்படாமல் டெண்டரும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த விபரம் எம்.எல்.ஏ கதிரவனின் சகலை இளம்பரிதிக்கு தெரியவரவே, உரிய விளக்கம் கேட்டு மணப்பாறை நகராட்சி சுகாதார அலுவலரை சந்தித்துள்ளார். அப்போது , ஏன் எனது நிறுவனத்தை தொடர்ந்து புறக்கணிக்கிறீர்கள்?, உரிய தகவல் தராமல் எப்படி டெண்டரை கேன்சல் செய்யலாம்?. அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்துவது முறையா?,
இதுகுறித்து முதல்வரின் தனிப்பிரிவிலும் புகார் ஏற்கெனவே கொடுத்துள்ளோம். அதன்பிறகும் ஏன் இப்படி செய்கிறீர்கள் எனக்கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த விவகாரம் தொடர்பாக நகராட்சி சுகாதார அலுவலர் மீது மணப்பாறை காவல் நிலையத்தில் இளம்பரிதி சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. போலீசார் இதுகுறித்து வீசாரணை நடத்தி வருகின்றனர்” என்றனர்.

Comments are closed.