Rock Fort Times
Online News

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வி.எஸ்.பாபுவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார், முதல்வர் விஜய்…!

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சென்னை, கொளத்தூர் தொகுதியில் தோற்கடித்து வெற்றி பெற்றவர் த.வெ.க.வை சேர்ந்த வி.எஸ்.பாபு. இவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 9ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். செப். 10 ம் தேதி மருத்துவமனை நிர்வாகம் சார்பில்
வெளியிடப்பட்ட அறிக்கையில், அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாகவும், பல்துறை நிபுணர்கள் குழுவின் கண்காணிப்பில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 14 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபுவை, தமிழ்நாடு முதல்வரும், தவெக தலைவருமான விஜய் இன்று(23-09-2026) நேரில் சென்று நலம் விசாரித்தார். அப்போது அவரது உடல்நிலை குறித்தும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்